கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலைத் தழுவி இயக்குனர் மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில், ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக நடிக்கிறார். அந்த கேரக்டருக்குள் வர, தான் ஒரு ராஜாவைப் போல சிந்திக்க ஆரம்பித்ததாக ரவி கூறினார்.
புது தில்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், மணிரத்னத்தை முதன்முதலில் சந்தித்த தருணத்தை ரவி நினைவு கூர்ந்தார். பொன்னியின் செல்வன் அல்லது ராஜ ராஜ சோழன், ஒரு முக்கிய பாத்திரம். நான் அந்த அழுத்தத்தை உணர்ந்தேன், ஆனால் மணி சார் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, அதை என்னிடமிருந்து அகற்றினார்.
அவர் என்னிடம் ‘ரவி, இது எனக்கு ரொம்ப முக்கியம். நாம் இருவரும் தான் அதை செய்ய வேண்டும், என்னால் தனியாக முடியாது. எனவே உங்களிடம் எந்த யோசனை இருந்தாலும் அதை கூறவும். நாம் ஒன்றாக அதை செய்வோம் என்றார். நான் ஒரு இயக்குனரின் நடிகர், அதுவும் மணி சார் என்றால் கேள்வியே இல்லை. எனது முழு கவனத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டேன் என்றார்.
மேலும் மணிரத்னம் தனது கதாபாத்திரத்தை எப்படி விவரித்தார் என்பதை ஜெயம் ரவி தெரிவித்தார். ‘ராஜ ராஜ சோழன் எங்கு பார்த்தாலும், அது அவருடைய மக்களும் அவருடைய ராஜ்யமும்தான். அவர் அரசியல் ரீதியாக சரியானவர். சமூக ரீதியாக சரியானவர், அவர் தனது குடும்பத்துடன் எப்படி இருந்தார், மற்ற மன்னர்களுடன் எப்படி இருந்தார். 19-20 வயதில் இத்தனை அணைகளைக் கட்டியுள்ளார். மணி சார் சொன்ன விஷயங்கள் இவை. நான் அதை என் தலையில் ஏற்ற ஆரம்பித்தேன், மணி சார் என்னை அதே மனநிலையில் இருக்கச் சொன்னார், என் அலுவலகத்தை விட்டு வெளியேறி ஆறு மாதங்கள் ராஜ ராஜ சோழனாக இருங்கள். ஏனென்றால் இது ஒரு நாளில் நடக்காது என்றார்.
ராஜராஜ சோழன் போன்ற ஒரு மன்னன் எப்படி நடந்து கொள்வான் என்பதைப் புரிந்துகொள்ள, தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பார்க்கும் விதத்தை எப்படி மாற்றிக் கொண்டேன் என்பதை ரவி பகிர்ந்து கொண்டார். நான் என் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் அமர்ந்தேன், என்னைச் சுற்றியுள்ள மக்களைக் கண்டு, ‘இவர்களெல்லாம் என் மக்கள் என்று நினைத்து, அதை நான் உணர ஆரம்பித்தேன்.
பிறகு கடற்கரையைப் பார்த்தேன், கடற்கரையும் என்னுடையது, அதில் உள்ள கப்பல்கள் எல்லாம் என்னுடையது என்று சொல்லிக் கொண்டேன். இது நகைச்சுவையாகத் தொடங்கியது, ஆனால் அது எனக்கு உதவியது. போகபோக எனது கவனம் மாறி அது அழகான உணர்வைத் தந்தது. இது ஒரு கடினமான பாத்திரம், ஏனென்றால் அவர் அனைவருக்கும் சரியாக இருக்க வேண்டும் என்று ஜெயம்ரவி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“