தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடித்த 'பிரதர்’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதாக ஜெயம் ரவி அறிவித்தார். அதே நேரம் அவரை விட்டு விலகி இருக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அவர் மும்பைக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர் பாலிவுட்டில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் நடிக்க இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக அவர் மும்பையில் புதிய அலுவலகத்தை அமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“