ரஜினியை தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் மற்றொரு ஹீரோ

ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருக்கும் 3 படத்திற்கான சம்பளத்திற்கு பதிலாக 20 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை போயஸ் தோட்டத்தில் வாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு ஜெயலலிதா வசித்த, ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் தோட்டத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தானாம். தற்போது, அந்த கனவு பலித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். போயஸ் தோட்டத்தில் புதிய வீடு வாங்கும் ஜெயம் ரவி ஸ்க்ரீன் சீன் […]

jayam ravi in poes garden, ஜெயம் ரவி
jayam ravi in poes garden, ஜெயம் ரவி

ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருக்கும் 3 படத்திற்கான சம்பளத்திற்கு பதிலாக 20 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை போயஸ் தோட்டத்தில் வாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு ஜெயலலிதா வசித்த, ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் தோட்டத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தானாம். தற்போது, அந்த கனவு பலித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

போயஸ் தோட்டத்தில் புதிய வீடு வாங்கும் ஜெயம் ரவி

ஸ்க்ரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று போயஸ் கார்டனில் உள்ளது. அதனை விலைக்கு வாங்க ஜெயம் ரவி முயற்சி செய்ததாகவும், பணத்திற்கு பதிலாக தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என அந்த பட நிறுவனம் வேண்டுகோள் விடுக்க அதனை ஜெயம் ரவியும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தம் போட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயம் ரவி சமீபத்தில் பதிவிட்ட ட்விட்டர் பதிவுக்கு பின்புலம் போயஸ் தோட்ட இல்லம் தானாம்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jayam ravi to get a plot in poes garden

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com