/indian-express-tamil/media/media_files/8xk3zixcwBpKKT8MWEiT.jpg)
பிரபல தென்னிந்திய நடிகையும் முன்னாள் எம்.பியுமான ஜெயசுதா தன் வாழ்வில் நடந்த அதிர்ச்சியான, மாற்றத்திற்கு வித்திட்ட சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜெயசுதாதெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் விஜய்யின் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். பலரும் அவரது நடிப்பை பாராட்டினர். இந்நிலையில் 'The 700 club' என்ற ஆங்கில யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஜெயசுதா தாம், இயேசு கிறிஸ்துவை நேரில் பார்த்ததாக கூறினார்.
1985-ல் எனக்கு திருமணமான பின் நானும் கணவர் நிதின் கபூரும் தேனிலவுக்கு தாய்லாந்து சென்றோம். அப்போது கணவர் என்னை நீர் விளையாட்டு (Jet Ski) ரைட்டு செல்ல அழைத்தார். எனக்கு தண்ணீர் என்றால் பயம். நான் வரவில்லை என்று கூறினேன். கணவர் மீண்டும் மீண்டும் அழைத்தால் நான் சென்றேன். எனக்கு நீச்சல் தெரியாது.
என்னிடம் லைவ் ஜாக்கெட் இல்லை. கணவர் வேகமாக Jet Ski செல்கிறார். நாம் கண்களை மூடிக் கொண்டு எதுவும் பார்க்காமல் உட்கார்ந்திருந்தேன். திடீரென நான் கட்டுப்பாட்டை இழந்து நீரில் தவறி விழுந்தேன். அப்போது நான் இனி உயிர் பிழைக்கமாட்டேன் என்று எண்ணினேன். விழுகும் நொடியில் பதறி கத்துகிறேன். அப்போது என்னை அறியாமல் நான் இயேசு கிறிஸ்து என்று அழைத்தேன். நான் இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் ஏன் அவ்வாறு அழைத்தேன் எனத் தெரியவில்லை.
அப்போது, திடீரென நான் மீண்டும் நிதானமாக மூச்சு விடுவது போல் உணர்ந்தேன், என்னை யாரோ மேலே கொண்டு வருவது போல் உணர்தேன். கண்களை திறந்த உடன் எனக்கு முன்னால் சூரிய ஒளியில் இயேசு கிறிஸ்துவை பார்த்தேன். அவரது கண்களை பார்த்த உடன் ஒரு தெய்வீக உணர்வு, அமைதி. அப்போது நான் இயேசு உணர்ந்தேன், அவர் உண்மை என நம்பினேன் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.