பிரபலம் இல்லை என்பதால் ஓரங்கட்டப்படுகிறாரா? உடைந்து அழுத ஜெஃப்ரி... பிக்பாஸ் வீட்டில் நடந்து என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய சீசன் சூடு பிடித்து வரும் நிலையில், அதில் ஒரு போட்டியாளரான ஜெஃப்ரி உடைந்து அழுத சம்பவம் பார்வையாளர்களிடையே அனுதாபத்தை பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigboss jeffrey

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 

Advertisment

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டியை எதிர் கொண்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்கான சிறந்த போட்டியாளர் மற்றும் சரியாக விளையாடாத போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஜெஃப்ரி மற்றும் பவித்ரா ஆகியோர் சக போட்டியாளர்கள் முன்னிலையில் தாங்கள் இருவரும் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தனர்.

அப்போது, ஜெஃப்ரியை கிண்டல் செய்யும் விதமாக விஷால் நடந்து கொண்டதற்கு அனைத்து போட்டியாளர்களும் சிரித்தனர். இதனால், வருத்தமடைந்த ஜெஃப்ரி தானும் மற்றவர்களை போல் பிரபலமாக இருந்தால் தனக்கும் அதிக வாக்குகள் கிடைத்திருக்குமென கூறினார். இதைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஒரு தருணத்தில் ஜெஃப்ரி உடைந்து கண்ணீர் விட்டு அழுதார். இது பார்வையாளர்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது. 

இறுதியாக, டாஸ்கின் முடிவில் முத்துக்குமரன் சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு அடுத்த இடங்களில் விஜே விஷால், ஆனந்தி உள்ளிட்டோர் இடம்பிடித்தனர். அதன்பின்னர், இந்த வார எவிக்‌ஷனில் இருப்பவர்களாக சௌந்தர்யா, விஜே விஷால், சஞ்சனா, முத்துக்குமரன், ஜெஃப்ரி, தர்ஷா, அர்ணவ், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்.

Advertisment
Advertisements

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Sethupathi Bigboss Tamil Bigboss Archana Bigboss Samyuktha Bigboss Oviya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: