/indian-express-tamil/media/media_files/2025/09/14/jenma-natchathiram-2025-09-14-17-05-42.jpg)
பணத்தை தேடும் நண்பர்கள்... ஆபத்தில் சிக்கியது எப்படி? ஜென்ம நட்சத்திரம் ஓ.டி.டி ரிலீஸ்!
கடந்த 2024-ஆம் ஆண்டு இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் உருவன படம் ‘ஒரு நொடி’ . இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் ’ஒரு நொடி’ குழுவினர் நடிப்பில் அடுத்து உருவான படம் ‘ஜென்ம நட்சத்திரம்’.
ஹாரர் த்ரில்லர் கதையாக உருவான ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தில் தமன் அக்ஷன் கதாநாயகான நடித்துள்ளார். இவருடன் மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதாநாயகனான தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் வந்து வந்து போகிறது. மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட்.
இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதை காளி வெங்கட் அரசியல்வாதியிடம் கேட்கிறார். ஆனால், அரசியல்வாதியை உதவாமல் காளிவெங்கட்டை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார்.
காளி வெங்கட்டை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு காளிவெங்கட் இறந்து போகிறார். பணத்தை எடுப்பதற்காக தமன் அவரது மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. பரபரப்பான கதையம்சம் கொண்ட இத்திரைப்படமானது ஜூலை 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.