‘அடங்க மறு’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா? சுறுசுறு ஜெயம் ரவி

Adanga Maru Movie: சில படங்கள் சரியாக போகாததால் இப்படத்திற்கு மிகுந்த மெனக்கெடலுடன் பணியாற்றி வருகிறார் ஜெயம்ரவி.

Jeyam Ravi’s Adanga Maru Tamil Movie Update: தமிழ் சினிமாவில் எந்த வீண் சர்ச்சைகளிலும் சிக்காமல் நல்லபிள்ளை நாயகன் ரேஞ்சில் இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் படம் அடங்கமறு.

ஜெயம் ரவி சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா படங்களை தவிர, வேறு படங்களில் பெரிய வெற்றியை அவர் அடையவில்லை. எனினும் தமிழ் சினிமாவில் பிசினஸ் ஹீரோக்கள் பட்டியலில் தொடர்ந்து இவர் இருப்பது கவனிக்கத்தக்கது.

வித்தியாசமான கதைக்களங்களில் பயணம் செய்து சத்தமில்லாமல் வெரைட்டி கொடுக்கும் கதாநாயகன் ரவி என்பதும் தெரிந்ததே. பேராண்மை போன்ற படங்கள் ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் நிச்சயம் பேசப்படக்கூடிய படமாக இருக்கும். அதேபோல் நிமிர்ந்து நில், பெரிய கமெர்ஷியல் வெற்றியை அடையவில்லை என்றாலும் பெயர் வாங்க்கிக்கொடுத்த படம்.


அந்த வரிசையில் ஒரு சமூக கதைதான் அடங்கமறு படமும் என்கிறார்கள். தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு சில படங்கள் சரியாக போகாததால் இப்படத்திற்கு மிகுந்த மெனக்கெடலுடன் பணியாற்றி வருகிறார் ஜெயம் ரவி. டிசம்பர் 21-ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். எனினும் மேலும் ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கப்படலாம். படத்தின் ரிலீஸ் தேதியை அரையாண்டு தேர்வுகள் முடிந்தவுடன், டிசம்பர் கடைசியில் விடுமுறை நாளில் வைத்துக் கொள்வார்கள் என தெரிகிறது.

திராவிட ஜீவா

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close