நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் தமிழக சுற்றுலா இடங்களுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழக டூரிஸ்ட் ஸ்பாட் அழகில் மயங்கிய ஜான்வி கபூரின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் தாய் மண்ணை மறக்க முடியுமா என்ன என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி – போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். தமிழ் சினிமாவில் இருந்து சென்று பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ம் ஆண்டு காலமானார். அம்மாவைப் போலவே, ஜான்வி கபூர் சினிமா துறையில் கால்பதித்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் தற்போது தனது நண்பரான ஓர்ஹான் அவத்ரமணியுடன் தமிழகத்தில் விடுமுறையில் இருக்கிறார். ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர், ஜோயா அக்தரின் ஆர்கி காமிக்ஸின் தழுவலான தனது முதல் படத்தில் நடிப்பதால் ஷூட்டிங்கில் ஜான்வி கபூர் தனது சகோதரியுடன் இணிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜான்வி கபூர் பாலிவுட்டில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஜான்வி கபூர் தனது நடிப்பால் ரசிகர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், நடிகை ஜான்வி கபூர், தமிழகத்தில் சுற்றுலா பயணம் செய்தவர், அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜான்வி கபூர், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகான இயற்கைச் சூழலில் இருக்கிறார்.
நடிகை ஜான்வி கபூர், தமிழக டூரிஸ் ஸ்பாட் அழகில் மயங்கி ரசித்தபடி இருக்கும் அவருடைய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் லைக் செய்து பாராட்டி கம்மெண்ட் செய்து வருகின்றனர். தாய் மண்ணை மறக்க முடியுமா என்ன என்று ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரிடம் கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“