பாலிவுட் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் கதையில் தல அஜித்துடன் இணைந்து ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் நடிகர் அஜித் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இதனை ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.விநோத் இயக்கி வருகிறார். இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
வதந்திகள் குறித்து ஜான்வி கபூர் விளக்கம்
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்திருந்தார் அஜித். அப்போது, ஸ்ரீதேவியிடம் பிங்க் படத்தினை தமிழில் ரீமேக் செய்தால் அதில் தானே நடித்து தருகிறேன் என்று அஜித் சொன்னதாக போனி கபூர் முன்பே தெரிவித்திருந்தார். ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு அவரது கனவை அஜித் நிறைவேற்ற முன்வந்துள்ளார் என்றும் அவர் கூறியிருந்தார்.
தல 59 படத்தில் உங்களுக்கு பிடித்த நடிகை... ரசிகர்கள் உற்சாகம்
இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வும் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீதேவி மகள் ஜான்வி தற்போது பிங்க் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு மகளாக ஜான்வி நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் ஜான்வி. அவர் கூறியதாவது, அஜித் படத்தில் நான் நடிக்கிறேன். தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறேன் என வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் அறிமுகமாகிறார். அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடிக்கின்றனர்.