காலா படத்தை பார்த்த ஜிக்னேஷ்... பா. ரஞ்சித் பற்றி என்ன பேசினார்?

‘காலா’ திரைப்படத்தைப் பார்த்த குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித்தை பாராட்டியுள்ளார்.

கடந்த 9ம் தேதி, உலகம் முழுவதும் ‘காலா’ திரைப்படம் வெளியானது. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘காலா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘நிலம் எங்கள் உரிமை’ என்ற மக்களின் நிலப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப்படும் இந்தப் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் வட்காம் தொகுதியில் தனித்து நின்று சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் நேற்று முன்தினம் ‘காலா’ திரைப்படத்தைப் பார்த்து தனது கருத்தை அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நேற்று காலா படத்தைப் பார்த்தேன். என்னையும் காலாவாகவே உணர்ந்தேன். நமது சகோதரர் ரஞ்சித் மீண்டும் ஒரு நல்ல படத்தை தந்துள்ளார். முக்கிய கருத்தை நுட்பமாகக் கையாண்டுள்ளார். பா. இரஞ்சித்தை நினைத்துப் பெருமையடைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close