இயக்குநர் டான் சாண்டி இயக்கி, ஜீவா நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ’கொரில்லா’. இதில் ஹீரோயினாக அர்ஜுன் ரெட்டி புகழ், ஷாலினி பாண்டே நடித்துள்ளார். சதீஷ், விவேக் பிரசன்னா, யோகிபாபு, ராதாரவி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளார்கள்.
பகுதிநேர போலி மருத்துவராகவும், முழுநேர பிக்பாக்கெட் திருடனாகவும் இருக்கும் ஜீவாவை காதலிக்கிறார் ஷாலினி பாண்டே. ஜீவாவுடன் வேலையிழந்த சதிஷ், நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் விவேக் பிரசன்னா, கீழ் வீட்டில் லோன் பெற கஷ்டப்படும் விவசாயி ஆகியோர் இணைகிறார்கள். இந்த நால்வரின் தேவை பணம்.
ஒரு நாள், ஜீவாவும் அவரின் இரண்டு நண்பர்களும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, அது ‘புரட்சிகர’ விஷயமாக மாறுகிறது. விவசாயிகள் கடனை தள்ளுபடியை செய்யுமாறு அவர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துகிறார்கள். இந்த வங்கி கொள்ளை ஒரு புதிய கான்செப்ட் அல்ல.
டான் சாண்டி தான் ஒரு சமூக உணர்வுள்ள இயக்குனர் என்பதை நிரூபிக்க விரும்புகிறார். அதனால் அவர் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக்கொள்கிறார். கத்தி, சீமராஜா, கடைகுட்டி சிங்கம் மற்றும் கண்ணே கலைமானே ஆகியப் படங்களின் வரிசையில் தனது படத்தையும் இணைத்துக் கொள்கிறார்.
ஜீவா வெற்றி படங்களை கொடுத்து வெகு நாட்களாகிவிட்டது. எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அவருக்கு, இந்த காமெடி கலந்த கதை கொஞ்சம் கை கொடுத்துள்ளது. மிக செயற்கைதனமாக இருந்த சில எமோஷனல் காட்சிகள் மற்றும் வசனங்களை தவிர்த்து கொஞ்சம் லாஜிக்காக இயக்கியிருந்தால் கொரில்லா பெரும் வெற்றி பெற்றிருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க Gorilla movie review