நடிகை ஜோதிகா தற்போது நடித்து வரும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தலைமுறைகளை தாண்டி பலருக்கு ஃபேவரெட் ஹிரோயினாக இருப்பவர் லிஸ்டில் கண்டிப்பாக ஜோதிகாவுக்கும் இடம் உண்டு. சமீபத்தில் வெளியான நாச்சியார், மகளிர் மட்டும் படங்களின் முதல் நாள் காட்சியில் உச்ச நடிகர் படங்களுக்கு கூடும் ரசிகர்களின் கூட்டம் போல் ஜோதிகாவின் படத்திற்கு கூட்டம் கூடியது.
ரஜினி, கமல்,விஜய், அஜித், சிம்பு என தமிழ் சினிமாவின் நம்பர் ஓன் ஹிரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ஜோதிகா.மொழி, சந்திரமுகி போன்ற படங்களை ஜோதிகாவிற்காகவே தியேட்டருக்கு படையெடுத்து சென்ற கூட்டமும் இருக்கிறது. இப்படி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு விலக்குவதாக அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
சரியாக 8 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் இண்ட்ரோ கொடுத்தார் ஜோதிகா. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலியே படம் அவருக்கும் கம்பேக்காக அமைந்தது. அதன் வெற்றித்தொடர்ந்து ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம்:
இந்நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ‘மொழி’ படத்துக்குப் பிறகு ராதாமோகன் - ஜோதிகா இணை மீண்டும் இப்படத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறது. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தின் ரீமேக் தான் ‘காற்றின் மொழி’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலையாளத்தில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி கம்மல் பாடல் சென்சேஷனாக மாறியது. இந்த பாடலின் உரிமையைப் பெற்று இயக்குனர் ‘காற்றின் மொழி’ படத்தில் உபயோகித்துள்ளார். இந்த பாடலின் படம்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா ஆகியோர் நடனமாடியிருக்கிறார்கள்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறதுய். இதைப் பற்றி கேள்விப்பட்ட ஜோதிகாவின் ரசிகர்கள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடி வீடியோவை பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.