ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் மற்றும் ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் வாஸ், மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கில் உரையாற்றிய போது, தென்னிந்திய ஊடகத்துறை பிராந்திய அளவில் இருந்து உலகளாவிய செல்வாக்கை பெற்ற வரலாற்றுப் பயணத்தை பற்றி பேசினார். இந்த கருத்தரங்கத்தின் "எல்லைகளை தாண்டி முன்னேறுதல்" என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தன் பயணத்தை நினைவுகூர்ந்த கெவின் வாஸ், “இந்த நிகழ்வு எனக்குப் பெரும் உற்சாகம் அளிக்கிறது. 2016ல் தென்னிந்தியாவில் ஸ்டார் டிவியின் வணிகப் பிரிவுகளை வழிநடத்தி என் பயணம் தொடங்கியது. இந்த சந்தைகளை நெருக்கமாக அனுபவித்தவராக, தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி பிராந்தியத்திலிருந்து தேசியம் வரை, தற்போது உலகளாவிய கவனத்தைப் பெறுவதைக் கண்டு பெருமை அடைகிறேன். சினிமா எல்லைகளை தாண்டி உலகளாவிய ரசிகர்களை ஈர்த்தவர் கமல்ஹாசன். “மூன்றாம் பிறை” (இந்தியில் “சத்மா”), “அப்பூ ராஜா,” மற்றும் “சாச்சி 420” (தமிழில் அவ்வை சண்முகி)போன்ற படங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கடந்து அனைவரையும் ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்தன என்று கூறியுள்ளர்ர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னேற்றம்
கொரோனா பிந்தைய காலகட்டத்தில், ஆர்,ஆர்.ஆர். (RRR) கே.ஜி.எஃப் 2 (KGF-2) மற்றும் காந்தாரா போன்ற தென்னிந்திய படங்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதை சிறப்பித்த அவர், தமிழ் சினிமாவின் “பொன்னியின் செல்வன்” மற்றும் “விக்ரம்” போன்ற படங்கள் கதைகளின் தனித்துவத்தால் தேசிய மற்றும் உலக அளவில் செல்வாக்கைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார், 2024ஆம் ஆண்டிலும், “புஷ்பா 2” ஹிந்தி டப்பிங் மூலம் மட்டுமே ஹிந்தி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் 20% அளவுக்கு பங்களித்ததையும், “மண்டேலா,” “கடைசி விவசாயி,” மற்றும் “சர்பட்ட பரம்பரை” போன்ற படங்கள் தமிழ் கதையின் ஆழத்தால் பாராட்டுப் பெற்றதையும் குறிப்பிட்டார்.
அறிவுப்பெற்ற சர்வதேச அங்கீகாரங்கள்
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 95வது ஆஸ்கர் விருதுகளை வென்றது, “ஆல் வீ இமேஜின் அஸ் லைட்” என்ற பாயல் கபாடியாவின் படமும், “சன்ஃப்ளவர்ஸ் வெர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ” என்ற கன்னட குறும்படமும் 2024 கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றிபெற்றது என தேசிய மானத்தின் அடையாளங்களாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/zJU7fJHsuIGtHDF6wjtc.jpg)
தொலைக்காட்சியின் தொடர்ந்த செல்வாக்கு
தென்னிந்திய படங்களின் பிரபலமடைந்ததற்குக் காரணமாக ஸ்டார் கோல்ட், கலர்ஸ் சினிப்ளெக்ஸ், செட் மேக்ஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் மிகவும் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. “தொலைக்காட்சி தற்போதும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் 30% மொத்த பகுதியைப் பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளூர் மொழி உள்ளடக்கங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.
டிஜிட்டல் மயமாக்கலின் வளர்ச்சி
இந்தியா ‘AND’ சந்தையாகும், ‘OR’ அல்ல”, தொலைக்காட்சியும் டிஜிட்டலும் இணைந்து வளர்ச்சி, சிருஷ்டித்திறன் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். சமூக ஊடகங்கள் தற்போது மக்கள் மகிழ்ச்சிக்காக விரைவில் பரவும் காட்சிகள், விமர்சனங்கள், பாடல்கள் ஆகியவற்றின் மூலம் மக்களை ஈர்க்கின்றன. இதனுடன் உள்ளடக்கத்தின் தனித்தன்மையையும் சமூக சீர்கேடுகளின் வரம்பையும் சமநிலைப்படுத்துவது மிக அவசியம்.
இந்திய மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம்
இந்திய மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறை உலக அளவிலான மேடையை அடையத் தயாராக இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ஜாஜு தலைமையில் WAVES என்ற புதிய முயற்சியை அறிவித்தார். இது கெளரவ பிரதமர் மற்றும் உயர்நிலை ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு புதுமை மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும். இந்த சந்தையில் மற்றும் இந்தியாவெங்கும் புதுமைகளை உருவாக்கக் கூடிய சரியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறேன் என்று, கெவின் வாஸ் கூறியுள்ளார்.
ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கம் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் உருவாகிவரும் போக்குகள், சந்தர்ப்பங்கள் மற்றும் சவால்களைப் பற்றி உரையாடும் ஒரு முன்னணி நிகழ்வாகும். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.