நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ, ஐ.ஐ.டி- பாம்பே உடன் இணைந்து ‘பாரத் ஜி.பி.டி’ திட்டத்தைத் தொடங்கப் பணியாற்றி வருவதாக இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி புதன்கிழமை தெரிவித்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைக்காட்சிகளுக்கு எனத் தனியாக ஓ.எஸ் (operating system) அறிமுகப்படுத்த இதை தயாரிப்பதாக கூறியுள்ளது.
நிறுவனத்தின் வருடாந்திர டெக்ஃபெஸ்ட்டில் பேசிய 32 வயதான அம்பானி குடும்ப வாரிசு, "வளர்ச்சிக்கான சுற்றுச்சூழல் அமைப்பை" உருவாக்குவது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார், மேலும் "ஜியோ 2.0" திட்டத்திற்கான பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் கூறினார்.
தற்போது, பெரிய மொழி மாதிரிகள் மற்றும் உருவாக்கும் ஏ.ஐ மூலம் முதல் கட்ட பணிகளைத் தொடங்கி விட்டோம், அடுத்த தசாப்தத்தில் இந்த பயன்பாடுகளால் வரையறுக்கப்படும் என்றார்.
"டி.விகளுக்காக நாங்கள் எங்கள் சொந்த OS இல் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) தயாரித்து வருகிறோம், அதை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி நாங்கள் விரிவாக யோசித்து வருகிறோம்" என்று அம்பானி கூறினார்.
தொடர்ந்து, 2024-ம் ஆண்டு எங்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும். ஏனெனில் என்னுடைய சகோதரருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது என்றார். மேலும், 5ஜி நெட்வொர்க்குகளை வழங்குவதில் நிறுவனம் மிகவும் உற்சாகமாக உள்ளது என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“