ஆர்.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படம்

நடிகை ஜோதிகா நடித்த ஜாக்பாட் திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் ஆர்.சரவணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Jodhika is again playing the director of Jackpot, actor and director Sasikumar, Ramji cinematography, நடிகை ஜோதிகா, மீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா, ஜாக்பாட், சசிகுமார், ஆர் சரவணன், சூர்யா, Govinda Vasanth music, Jyothika again playing in jackport movie director, Director R Saravanan, Samuththirakani, Suri, Jyothika

இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்த ஜாக்பாட் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஜாக்பாட் படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து, ஜோதிகா இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார், சூரி ஆகியோரை நடிக்க வைக்க அணுகி வருவதாகவும் ஆனால் அவர்கள் இன்னும் உறுதியாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜோதிகா இயக்குனர் அகமதுவின் உதவியாளர் ஜே.ஜே.ஃபிரெடெரிக் இயக்கத்தில் தயாராகிவரும் பொன்மகள் வந்தால் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் போன்ற இயக்குனர் நடிகர்களும் நடிக்கின்றனர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்தப் படத்துக்கு 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்தா வசந்த் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுமட்டுமில்லாமல், ஜோதிகா பாபநாசம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பின் இயக்கத்தில் தற்காலிகமாக தம்பி என்று பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார். இதில் அவரது மைத்துனரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தியும் நடிக்கிறார். இதில் கார்த்தி ஜோதிகாவின் சகோதரராக நடிக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jodhika is again playing the director of jackpot also sasikumar an important role

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com