/tamil-ie/media/media_files/uploads/2020/11/johnny-depp.png)
ஜானி டெப் - பலருக்கும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியனின் ஜாக் ஸ்பேரோவாக நமக்கு நன்றாக அறிமுகமானவர். தற்போது ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் 3 என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி ஒரு காட்சியிலும் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக நவம்பர் 6ம் தேதி வார்னர் ப்ரோஸ் நிறுவனம் அறிவித்தது.
”தி சன்” செய்தி நிறுவனம் ஜானி டெப் தன்னுடைய முன்னாள் மனைவியை கடுமையாக தாக்கி மோசனமான கணவராக நடந்து கொண்டார் என்று செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். ஆனால் நீதிமன்றத்தில், செய்தி நிறுவனத்திற்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஜானி டெப்பின் புகைப்படங்கள், மெசேஜ் ஆதாரஙக்ள் மற்றும் பல்வேறு முக்கியமான தகவல்களை வழங்கவும், அந்த வழக்கில் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் pay-or-play என்ற ரீதியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருப்பதால், அவர் நடிக்கும் படம் பாதியில் நிறுத்தப்பட்டால், அல்லது படம் வெளியாகவில்லை என்றாலும், மீண்டும் வேறு நபர்களை வைத்து இயக்கினாலும், அவருக்கு ஒப்பந்தம் படி சம்பளத்தை வழங்க வேண்டும். தற்போது அவர் அந்த படத்திற்கான தன்னுடைய 8 இலக்க சம்பளத்தை பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வார்னர் ப்ரோஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கவில்லை. மாறாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.