New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1758.jpg)
Joker Heroine Ramya Pandian saree photo shoot goes viral - கவர்ச்சி போட்டோ ஷூட் வெளியிட்ட 'ஜோக்கர்' பட ஹீரோயின்! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஒரு பெண் திரையுலகில் ஜெயிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு கண் முன்னே சான்றாய் நிற்கிறார் ரம்யா. ஹோம்லி கேரக்டரில் நடித்தும், பெரிதளவு வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை
Joker Heroine Ramya Pandian saree photo shoot goes viral - கவர்ச்சி போட்டோ ஷூட் வெளியிட்ட 'ஜோக்கர்' பட ஹீரோயின்! ரசிகர்கள் அதிர்ச்சி!
ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தின் நாயகி ரம்யா பாண்டியன், தான் சேலையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்திருக்கிறார்.
'ஜோக்கர்' பட நாயகி ரம்யா பாண்டியன், குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான 'ஆண் தேவதை' படத்திலும் சமுத்திரக்கனி மனைவியாக ஹோம்லி கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால், அவரது ஹோம்லி லுக் படங்கள் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இருப்பினும், ஜோக்கர் படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இது வரையில் குடும்பப் பெண்ணாகவே நடித்து வந்த ரம்யா பாண்டியனுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சமூக தளங்களில் அடிக்கடி 'மொட்டை மாடி போட்டோ ஷூட்' புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இது வரையில் டீசன்ட்டான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியிட்டு வந்தவர் தற்போது கவர்ச்சி உடைக்கு மாறியிருக்கிறார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்று நினைத்தாரோ என்னவோ விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
ஒரு பெண் திரையுலகில் ஜெயிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு கண் முன்னே சான்றாய் நிற்கிறார் ரம்யா. ஹோம்லி கேரக்டரில் நடித்தும், பெரிதளவு வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.
ஆனால் இவரது சேலை போட்டோ ஷூட் சமூக தளங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.