நடிகர் விஜயகுமார் மனைவி நடிகை மஞ்சுளாவின் மடியில் சிறுமியாக அமர்ந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது ஹாட்டாக இருக்கும் இவரைப் பார்த்ததும் அடையாளம் தெரிகிறதா என்று சொல்லுங்கள்.
தமிழ் சினிமா உலகில் வெற்றிகரமான தம்பதிகளாக இருந்தவர்கள் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆவர், விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியருக்கு இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று மகள்கள், அருண் விஜய் என ஒரு மகனும் உள்ளனர். நடிகை மஞ்சுளா உடல்நலக் குறைவு காரணமாக 2013-ம் ஆண்டு மறைந்தார். தற்போதுகூட விஜய்குமார் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜயகுமார் - மஞ்சுளா மகள்கள், மகன் சினிமா துறையில் தொடர்புடையவர்களாகவே உள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/nw6xyULEFxRduKeMqGPM.jpg)
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி வாய்ப்புகள் கிடைக்காமல் ஒதுங்கி இருந்தார். மண வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்த வனிதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் சிங்கிள் மதராக வளர்த்து வருகிறார்.
நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது 2வது இன்னிங்ஸை தொலைக்காட்சிகளில் தொடங்கினார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின்போது, வனிதாவின் மகள்கள் அவரைப் பார்க்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது வனிதாவின் மகள்கள் கவனம் பெற்றனர்.
வனிதா விஜயகுமார் தனது மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்துக்கொண்டு கவனம் பெற்றுள்ளார். தற்போதைய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்சியில் ஜோவியாக ஒரு உறுதியான போட்டியாளராக இருந்து வருகிறார். இதையடுத்து, ஜோவிகா ஆர்மி என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகுமார் - மஞ்சுளா-வின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி உள்ளார். இவருடைய சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், நடிகை மஞ்சுளாவின் மடியில் சிறுமியாக அமர்ந்திருக்கும் ஜோவிகாவின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், 2 சிறுமிகள் அமர்ந்திருக்கிறார்கள். இதில் பிக் பாஸ் பிரபலம் ஜோவிகா யார் என்று பார்த்ததும் அடையாளம் தெரிகிறதா பாருங்கள் என்று மஞ்சுளாவின் மடியில் ஜோவிகா சிறுமியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பள்ளிப் படிப்பை முடிக்காத ஜோவிகா, படிப்பின் மீது ஆர்வம் இல்லாவிட்டாலும் நடிப்புதான் தனது கரியர் என்று தேர்வு செய்து மும்பை சென்று நடிப்பு பயிற்சி படித்துள்ளார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் ஹாட்.
ஜோவிகா தனது பாட்டி மஞ்சுளாவின் மடியில் சிறுமியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் ஜோவிகா யார் சொல்லுங்கள் பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“