/indian-express-tamil/media/media_files/nw6xyULEFxRduKeMqGPM.jpg)
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ள உள்ளே அனுப்பப்பட்டனர். பெரும்பாலும் இளம் போட்டியாளர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே பரபரப்பு சண்டை, சச்சரவு என பார்வையாளர்களை ஈர்த்து வந்தது. முதல் வாரத்திலேயே நாமினேஷன் நடந்தது. நாமினேஷன் அடிப்படையில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை உடல் நல பிரச்சனை காரணமாக தானாகவே வெளியேறினார். அதன் பின் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்த நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்ன பாரதி என 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுகுள் நுழைந்தனர். இவர்களில் அன்ன பாரதி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கானா பாலா வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் சரவண விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டனர். இவர்களில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஜோவிகா 60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில், அவருக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் என சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்ததாக கூறப்படுகிறது
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, அவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியதுமே சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டார்.
ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டார். சமூக வலைதளங்களில் ஜோவிகா ஆர்மி உருவாக்கி ஆதரவாகப் பதிவிட்டனர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் ஜோவிகாவுக்கும் மற்றொரு போட்டியாளரான விசித்ராவுக்கும் இடையே படிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை அதனால், தனக்கு இருக்கும் திறமையை வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.