2023-ல் திருமணம், முதல் மனைவிக்கு தெரியாம நடக்கல; மாதம்பட்டி வீட்ல தான் எங்க தல தீபாவளி; ஜாய் கிரிஸில்டா ஓபன் டாக்!

ஜாய் கிரிசில்டா அளித்த பேட்டி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவர்களது திருமண வாழ்க்கை குறித்தும் தற்போது நடந்துவரும் சர்ச்சைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

ஜாய் கிரிசில்டா அளித்த பேட்டி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவர்களது திருமண வாழ்க்கை குறித்தும் தற்போது நடந்துவரும் சர்ச்சைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
joy crisilda

சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா உடனான தனது திருமணம் குறித்து எந்தவொரு தகவலையும் பகிராத நிலையில், ஜாய் கிரிசில்டா தனது திருமணம் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த பல முக்கிய தகவல்களை வெளிப்படையாக பேசி உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா, தனது கணவர் மற்றும் அவரது முதல் மனைவி குறித்து சிவசங்கரி டாக்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisment

மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவிக்குத் தெரியாமல் அவர்களின் திருமணம் நடக்கவில்லை என்றும், முதல் திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தான் காரணம் இல்லை என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டில் மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக நடிகை ஜாய் கிரிஸில்டா சமூக வலைத்தளங்களில் அறிவித்தபோது, பலரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, ரங்கராஜின் முதல் மனைவிக்குத் தெரியாமல் இது நடந்திருக்கலாம் என பல வதந்திகள் பரவின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜாய் கிரிஸில்டா இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

madhampatty rangaraj

"எங்கள் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதிதான் நடந்தது," என்று ஜாய் கிரிஸில்டா வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், "இந்தத் திருமணத்திற்கு ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதிக்கு முழு சம்மதம் உண்டு. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர்கள் பிரிந்துதான் இருந்தனர். அதன்பிறகுதான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நான் அவர்களின் பிரிவுக்கு ஒருபோதும் காரணம் இல்லை" என்று அழுத்தமாகத் கூறினார். இந்தத் தகவல், இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையின் ஒரு முக்கியமான பக்கத்தை ரசிகர்களுக்குத் திறந்துகாட்டியது.

Advertisment
Advertisements

ஜாய் கிரிஸில்டா, தனது கணவர் ரங்கராஜின் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய தீபாவளி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். "எங்கள் முதல் தீபாவளி கொண்டாட்டம் மாதம்பட்டியில் உள்ள ரங்கராஜ் வீட்டில்தான் நடந்தது. அவரது தாய், சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்து மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்," என்று அவர் கூறினார். "அதுமட்டுமல்ல, இந்த கொண்டாட்டத்தில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியும் கலந்துகொண்டார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. எங்கள் குடும்ப உறவு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் சுமுகமாக இருந்ததுது" என்றும் அவர் தெரிவித்தார். 

Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: