/indian-express-tamil/media/media_files/2025/09/10/screenshot-2025-09-10-113054-2025-09-10-11-31-21.jpg)
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறி சர்ச்சையை உருவாக்கியவர் ஜாய் கிரிசில்டா. மேலும், தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் கூறி மேலும் கவனம் ஈர்த்துள்ளார். இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் இந்த விவகாரத்தில் எந்தவிதமான கருத்தும் வெளியிடாமல் மவுனமாக இருக்கிறார். இதனையடுத்து, இணையத்தில் அதிகமாக தேடப்படும் பெயராக ஜாய் கிரிசில்டா மாறியுள்ளார். ஒரு ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய், விஜய்யின் 'ஜில்லா', ரவி மோகனின் 'மிருதன்', சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஜாய் கிரிசில்டா 2018ஆம் ஆண்டில் ஜே ஜே ப்ரெட்ரிக் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பிறகு, ஜாய் சினிமா தொழிலில் இருந்து விலகி இருந்தார். ஆனால், திருமண வாழ்க்கையின் ஐந்தாவது ஆண்டில், இருவருக்குமுள்ள கருத்து வேறுபாடுகளால் 2023ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
ஜே ஜே ப்ரெட்ரிக் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கி உள்ளார். இப்படம் லாக்டவுன் சமயத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தை இயக்க கமிட் ஆனார் ப்ரெட்ரிக். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன்பின்னர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே அப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் ஸ்டைலிஷ்டாக பணியாற்ற தொடங்கிய ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பர்சனல் ஸ்டைலிஷ்டாக பணியாற்றி வந்தார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் அணிந்து வரும் வித்தியாசமான ஆடைகளையெல்லாம் வடிவமைத்தது ஜாய் தான். ஸ்டைலிஷ்டாக பணியாற்றி வந்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட ஜாய், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தாங்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்தார். இதையடுத்து தற்போது தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி அவரின் குழந்தை தன்னுடைய வயிற்றில் உள்ளதாக கூறி ஜாய் கிரிசில்டா ஒருபுறம் பரபரப்பை கிளப்பி இருக்க, மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பயோவில், தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அவர் விரைவில் விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.