வருவார், ஏமாற்றி குழந்தை கொடுப்பார்; ஆனா அவர் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சி: ஜாய் கிறிஸில்டா வழக்கறிஞர் ஆவேசம்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஜாய் கிறிஸில்டா வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஜாய் கிறிஸில்டா வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
joy

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் பல முன்னணி திரைப்பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுத்து வருகிறார். இவர் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமடைய செய்துவிட்டு ஏமாற்றியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜாய் கிறிஸில்டா வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையத்தில் புகாரளித்த பின் வழக்கறிஞர் பேசியதாவது,  "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக ஜாய் கிறிஸில்டா, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது அந்த புகார் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. இதுவரை அந்த புகார் குறித்து விசாரிக்கவில்லை. 

பதிலாக அடையார் காவல் நிலையத்தில் இருந்து கால் செய்து எங்களுடைய காவல் நிலையத்திற்கு இந்த புகார் வரவில்லை என்று கூறுகிறார்கள். இதேபோன்று திருவான்மியூர் காவல் நிலையத்திலும் கூறுகிறார்கள்.
எல்லா காவல் நிலையங்களும் ஜாய் கிறிஸில்டாவை தொடர்பு கொண்டு எங்கள் எல்லைக்கு இந்த புகார் வரவில்லை என்று கூறுகிறார்கள். காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் எந்த காவல் எல்லையில் வரும் என்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தெரியும். ஆனால், சரியான காவல் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பவில்லை. எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. அதன் பின்பு ஆயிரம் விளக்கு பகுதியில் புகார் கொடுத்திருந்தோம். நான்கு நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் ஜாய் கிறிஸில்டாவை அழைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது. இதன்பின்னர், மாதம்பட்டி ரங்கராஜை விசாரணை செய்த காவல்துறையினர் ஊடகத்திற்கு  தெரியக் கூடாது என்பதற்காக பின்வாயில் வழியாக மாதம்பட்டி ரங்கராஜை அனுப்பியதாக எங்களுக்கு தகவல் வந்தது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு குற்றம் செய்த நபர் மீது கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் விசாரிக்கவில்லை என்றால் சாதாரண படிக்காத கிராம்ப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும். வருவார், ஏமாற்றுவார் குழந்தையை கொடுப்பார் சமுதாயத்தில் எங்குனாலும் செல்வார் அவர் மீது எந்தவொரு புகாரும் எடுக்கப்படாது என்றால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Advertisment
Advertisements
Cinema Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: