/indian-express-tamil/media/media_files/2025/08/29/joy-crizildaa-chennai-police-complaint-madhampatty-rangaraj-tamil-news-2025-08-29-11-41-42.jpg)
தமிழ் சினிமா வட்டாராத்தில் பிரபலமாக அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மாவட்டம் மாதம்பட்டியில் பிறந்ததன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் என அழைக்கப்படுகிறார். இவரது தந்தை சினிமா வட்டாராத்தில் மிகப் பிரபலமான சமையல் வல்லுனராக அறியப்பட்ட நிலையில், சமையல் துறையில் படிப்பை மேற்கொண்டு தானும் சிறந்த சமையல் வல்லுனர் என்பதை நிரூபித்தார். அவரது பாரம்பரிய ரெசிபிக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமையலைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் சினிமாவில் காலாடி எடுத்து வைத்தார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து 'பென்குயின்' படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் சமையல் செய்து அசத்தி பெரும் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி மேலும் புகழ் பெற்றுள்ளார். தற்போது அந்த ஷோ-வில் பணியாற்றி வரும் ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர்.
இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிறிசால்டாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மாலைகள் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜாய் கிறிசால்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட, அது காட்டுத் தீ போல் இணையத்தில் பரவியது. இந்த அலை ஓய்வதற்குள் ஜாய் கிறிசால்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து அடுத்த புகைப்படத்தை இறக்கினார். இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த சர்ச்சை சற்று அடங்குவதற்குள் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். இருவரும் பங்கேற்று அருகருகே அமர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. ஸ்ருதி ஒரு பக்கமும், ரங்கராஜ் ஒரு பக்கமும் திரும்பி அமர்ந்திருந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து, தனக்கு பிறகுக்க போகும் குழந்தைக்கு ரஹா ரங்கராஜ் எனப் பெயரிட இருப்பதாக குறிப்பிட்டு ஜாய் கிறிசால்டா புகைப்படம் ஒன்றை பதிவிட அதுவும் இணையத்தில் வைரலாகியது.
இத்தகைய சூழலில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிறிசால்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாகவும், கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட அவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும், முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், அது பற்றி மாதம்பட்டி ரங்கராஜிடம் ஜாய் கிறிசால்டா கேட்டபோது அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தனது வழக்கறிஞருடன் இன்று சென்னை போலீஸ் ஆணையரகம் வருகை தரும் ஜாய் கிறிசால்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் பணியாற்றும் சமையல் நிகழ்ச்சி நிறுவனத்தில் ஜாய் கிறிசால்டா கேட்டதாகவும், அதற்காக அவர் தன்னை தாக்கியதாகவும் ஜாய் கிறிசால்டா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.