scorecardresearch

ஜுங்கா ஜூரம்! நாளை உலகம் முழுவதும் ரிலீஸ்!

Junga Movie Release Date: விஜய் சேதுபதியின் ஜுங்கா திரைப்படம் நாளை ரிலீசாகிறது

ஜுங்கா
Junga Tamil Movie Release Date: ஜுங்கா நாளை ரிலீஸ் ஆகிறது

Junga Movie Release: ‘ரௌத்திரம்’ , ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ‘ஜுங்கா’ படம் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே நாளை இப்படம் ரிலீசாகிறது. காமெடி டாணாக இதில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தில் நிச்சயம் காமெடி தூக்கலாக இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.

சாயீஷா, மடோனா செபாஸ்டியன், ராதாரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கோகுலின் ஆஸ்தான இசையமைப்பாளர் சித்தார்த் விபின் தான் இதற்கும் இசை அமைத்துள்ளார். இவர் காம்போவில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை என இரண்டையும் கோகுலே எழுதி இயக்கியுள்ளார். வி.ஜே.சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Junga 2018 junga movie star cast story and release date

Best of Express