கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஹேமா தலைமையில் முன்னாள் அதிகாரி கே.பி.வல்சலகுமாரி மற்றும் பழம்பெரும் நடிகை சாரதா ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட மூன்று பேர் கொண்ட ஆணையம் கேரளா அரசைால் அமைக்கப்பட்டது.
Read In English: Justice Hema Committee Report: Female actor reveals it took her 17 retakes to complete a hugging scene with assaulter
2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்ட இந்த குழு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பவர் மாதம் தங்களது அறிக்கையை கேரளா அரசிடம் ஒப்படைத்தது. ஆனால் நேற்றுவரை சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு இந்த அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது பல போராட்டம் மற்றும் ஆர்.டி.ஐ. மனுக்களுக்கு பிறகு, ஹேமா குழு சமர்பித்த அறிக்கை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது, இதில் மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி பல தகவல்களை தெரிவித்துள்ளது,
பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை, பாலின பாகுபாடு மற்றும் பாகுபாடு, ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அதிகாரம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் ஆய்வு செய்து தகவல்களை கொடுத்துள்ளனர் இந்த. மூன்று பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு நடிகருடன் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒரு நடிகை அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். படத்தில் அந்த பெண்ணும் நடிகரும் திருமணமான ஜோடியாக நடிக்கிறார்கள், ஒரு காட்சியில் அந்த பெண் அந்த நடிகரை கட்டிப்பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாலியல் வன்கொடுமையை நினைத்து பார்த்த அந்த பெண்ணால், அந்தக் காட்சியைக் கடக்க முடியவில்லை.
அடுத்த நாள் முதல் கணவன் மனைவி ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது போல அதே ஆணுடன் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. படப்பிடிப்பின்போது அந்த நடிகைக்கு வெறுப்பு வந்துள்ளது. ஆனாலும், இந்த நடிகர் ஏன் இந்த காட்சிகளை பலமுறை எடுக்கிறார் என்பது புரியாமல், தயாரிப்பாளர் மற்றும் அந்த நடிகரை கடுமையாக விமர்சித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காட்சி கிட்டத்தட்ட 17 டேக்குகள் வரை சென்றுள்ளது.
மேலும்,“ பெண்கள் பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வருகிறார்கள், எதற்கும் தயாராக இருப்பார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஒரு பெண் சினிமாவுக்கு வருவதற்கு கலை மற்றும் நடிப்பு மீதான மோகத்தால் தான் என்று சினிமாவில் இருக்கும் ஆண்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், அவர்கள் புகழுக்காகவும், பணத்திற்காகவும் வருகிறார்கள் என்றும், சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக எந்த ஆணுடன் இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான பாலியல் தன்புறுத்தல்களுக்கு இடம் கொடுக்காதவர்கள் 'பிரச்சனை செய்பவர்' என்று முத்திரை குத்தப்பட்டு, தொழில்துறையில் இருந்து அடிக்கடி ஒதுக்கி வைக்கப்படுவதால், இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதில்லை. “நடிப்பில் ஆர்வமுள்ள பெண்கள் எல்லா கொடுமைகளையும் அமைதியாக அனுபவிக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் மற்ற பெண்களுக்கும் இதே அனுபவம் இருக்கிறதா என்று அந்த நடிகையிடம் கேட்டபோது, அவர்களுக்கும் இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூற பயப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்
இது குறித்து பேசிய நடிகைகளின் வாட்ஸ்அப் செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள் உள்ளிட்ட ஆவணங்களையும் மதிப்பீடு செய்தது. உண்மையில்அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் புகார் கொடுக்க முன்வராதது அவர்களுக்கான வாய்ப்பு பறிபோகும் என்பதால் மட்டுமல்ல. சைபர்புல்லிங் மற்றும் ட்ரோலிங் ஆகியவற்றை கண்டு அஞ்சுவதும் ஒரு காரணம். காஸ்டிங் கவுச் பற்றிய கேள்விகளுக்கும் அறிக்கையில் பதில் அளித்திருக்கும் நடிகைககள், சினிமாவில் பெண்கள் நடிப்பதற்கான யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.