Advertisment

ஜோடியாக கடுமையாக உடற்பயிற்சி செய்த சூர்யா - ஜோதிகா; இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ

நடிகை ஜோதிகா - சூர்யா கணவன் மனைவி இருவரும் உடற்பயிற்சிக் கூடத்தில் ஜோடியாக கடுமையான உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Surya Jyothika workout

சூர்யா - ஜோதிகா கணவன் மனைவி இருவரும் ஜோடியாக வொர்க் அவுட் செய்யும் காட்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை ஜோதிகா - சூர்யா கணவன் மனைவி இருவரும் உடற்பயிற்சிக் கூடத்தில் ஜோடியாக கடுமையான உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

திரைப்படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்த நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் காதலித்து 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திரையுலகில் வெற்றிகரமான ரியல் ஜோடிகளாக வலம்வரும் சூர்யா - ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் கம்மிட் ஆகி பிசியாக இருக்கிறார். தற்போது சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதே போல, ஜோதிகாவும் சினிமாவில் பிசியாக இருக்கிறார். ஜோதிகா நடித்த சைத்தான் என்ற இந்தி படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜோதிகா மேலும் சில இந்தி படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அண்மையில் ஜோதிகா ஒரு ஆக்‌ஷன் படத்துக்கான போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஜோதிகா ஒரு ஆக்‌ஷன் ஹீரோயின் போலவே இருந்தார்.

இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடியாக உடற்பயிற்சிக் கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யா - ஜோதிகா இருவரும் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்கள். பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஜோதிகா உடற்பயிற்சி செய்கிறார். ஜோதிகா உடற்பயிற்சி செய்ய சூரியா உதவுகிறார். 

சூர்யா - ஜோதிகா கணவன் மனைவி இருவரும் ஜோடியாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களையும் இணையத்தையும் கலக்கி வைரலாகி வருகிறது. சூர்யா - ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மலைத்துப் போயிருக்கிறார்கள். சூர்யா - ஜோதிகா வொர்க் அவுட் வீடியோவை பார்த்த நடிகர் மாதவன் 'மிக அருமை' என்றும் நடிகை ஷில்பா ஷெட்டி 'வாவ்' என்றும் கம்மெண்ட் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jyothika Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment