Jyothika : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விருது விழா நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. அதில் வீடியோ பேசியவைகள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
அந்த வீடியோவில், ‘பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.
அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கு பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.
கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு அப்போது ஒரு மாதிரி ஆகிவிட்டது.
நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு அங்கும் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறியுள்ளார். ஜோதிகாவின் இந்தப் பேச்சை பதிவிட்டு பலரும் அவருக்கு ஆதராவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
Its really bold for a heroine 2 say what she said, even some big heros dt approch these topics. Instead of spreading hate in the name of religion, degrading women & doing politics out of it! Better improv d hospitals & school instead of fighting for a religion! #jyothika #jyotika https://t.co/1xhjCAVJZS
— Dhushanthy (@Dhushanthy2) April 21, 2020
"they maintaining Thanjavur bigtemple like palace I already seen that place.. but the hospital is n very bad condition .. please donate some amount also for hospital" this is what #Jyothika said exactly. Don't make politics. #istandwithjyothika #jyotika @fredrickjj @Suriya_offl
— Ranjith prabu (@Ranjithprabu) April 23, 2020
#jyothika I think bad times started for jyothika suriya and entire sivakumar family, whenever one who talk about tnj big tepmle, I said very tough time will start for them....dont say anything above.....
— vengateshndy (@vengateshndy) April 22, 2020
கோவில் உண்டியலில் காசு போடறதை அரசு தான் எடுக்குது..
கோவில் உண்டியல் காசு போட்டதால் தான் திருப்பதியில் இன்று தினமும் 50,000 பேருக்கு உணவு கிடைக்குது...
ஏன் அரசு சர்ச், மசூதிகளுக்கு பணம் தரவேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே?? pic.twitter.com/lIjO2oiWri
— நவீன புத்தன் (@ModernBuddhan) April 22, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.