’கோயிலுக்கு இதெல்லாம் பண்றீங்களே?’ – சர்ச்சையாகும் ஜோதிகாவின் பேச்சு

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்.

By: Updated: April 23, 2020, 12:06:45 PM

Jyothika : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விருது விழா நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. அதில் வீடியோ பேசியவைகள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

அந்த வீடியோவில், ‘பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கு பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு அப்போது ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு அங்கும் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறியுள்ளார். ஜோதிகாவின் இந்தப் பேச்சை பதிவிட்டு பலரும் அவருக்கு ஆதராவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Jyothika controversial speech on thanjai periya koil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X