/indian-express-tamil/media/media_files/XLC5V9aP09EEfWvSKGGk.jpg)
தனது மனைவி ஜோதிகா இந்தியில் நடித்துள்ள ஸ்ரீகாந்த் படம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்திர் வைரலாகி வரும் நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களை தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளப்படம் அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்த நிலையில், அடுத்து இந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியுள்ள ஜோதிகா இந்தி படங்களில் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் பொல்லா என்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படத்தை துஷார் ஹரிந்தானி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, "ஸ்ரீகாந்த் படம் ஒரு அழகான ரோலர்கோஸ்டர் பயணம்.இந்த பயணம் நம்மை சிரிக்க வைக்கும் மற்றும் ஒரு நபர் வாழ்க்கையில் பல விஷயங்களை எவ்வாறு சாதிக்க முடியும் என்பதை உணர வைக்கும். படத்தின் முன்னணி நடிகர் ராஜ்குமார் ராவின் நேர்மையான முயற்சிகளுக்கு மரியாதை மற்றும் துஷார் ஹிரானந்தனி, இயக்கத்திற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
.#Srikanth the film is a beautiful rollercoaster ride that’ll make us laugh cry & realise how one person can achieve so many things in life! #Respect@RajkummarRao for his sincere efforts & #TusharHiranandani, Nidi & @Tseries congrats! & #Jyotika the kind of stories you’re part… pic.twitter.com/zz2HPh4gw3
— Suriya Sivakumar (@Suriya_offl) May 10, 2024
மேலும் நீங்கள் நடிக்கும் கதைகள் எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஜோ! நீங்கள் இருப்பது உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் மிகவும் நிஜமாக்குகிறது! இது ஒரு முக்கியமான படம் நண்பர்களே, உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள். இன்றிலிருந்து திரையரங்குகளில் என்று தனது மனைவிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்கா காக்கா, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்த சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.