ஜோதிகாவின் பிறந்தநாளுக்கு ’பொன் மகள் வந்தாளின்” சர்ப்ரைஸ் - வீடியோ உள்ளே!

Pon Magal Vandhal: ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் ஜோ.

Pon Magal Vandhal: ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் ஜோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jyothika controversial speech, thanjai periya koil

Jyothika

Jyothika: கடந்த 1999-ல் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய, ’வாலி’ படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஜோதிகா. அதன் பின்னர் சிங்கிள் ஹீரோயினாக அவர் நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் ஜோ-வுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

Advertisment

தமிழில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தன் சக நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பு, பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் ஜோ.

திருமணமானதும் சற்று இடைவெளி விட்டு, 2015-ல் ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ எண்ட்ரியானார். மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் ’36 வயதினிலே’ படம். அதனைத் தொடர்ந்து பெண்ணுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.

Advertisment
Advertisements

இந்நிலையில் ’ஜாக்பாட்’ படத்தைத் தொடர்ந்து, ’பொன் மகள் வந்தாள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த எக்ஸ்பிரஷன்ஸ் குயின். இதனை புதுமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசை, ‘96’ புகழ் கோவிந்த் வஸந்தா. நேற்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஜோ. இதனை முன்னிட்டு, அழகிய மியூசிக்கல் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டு, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் ’பொன் மகள் வந்தாள்’ படக்குழுவினர்.

Jyothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: