Advertisment

4 முக்கிய இயக்குநர்களுடன் ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

Ponmagal Vandhal: பிரபல நடிகர்களும் இயக்குநர்களுமான, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jyothika's Ponmagal Vandhal

Ponmagal Vandhal

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் கடந்தவாரம் வெளியான ‘ராட்சசி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அரசு பள்ளியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அதில், கீதா ராணி என்ற கதாபாத்திரத்தில் தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார் ஜோ.

Advertisment

தவிர, நடிகை ரேவதியுடன் இணைந்து ‘ஜாக்பாட்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  அதோடு பாபநாசம் பட இயக்குநர் ஜித்து ஜோசப்பின் பெயரிடாதப் படத்திலும் நடித்து வருகிறார். இதில் கார்த்தியும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Ponmagal Vandhal Pooja Still Ponmagal Vandhal Pooja Still

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் ஜோதிகா. அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கும் இந்தப் படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபல நடிகர்களும் இயக்குநர்களுமான, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்திற்கு இசை ’96’ பட புகழ் கோவிந்த் வஸந்தா. ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார். இன்று பொன்மகள் வந்தாள் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.

Tamil Cinema Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment