Ponmagal Vanthal : ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTT தளத்தில் முதன்முறையாக வெளியாவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவின் பரவல் விகிதத்தை மிஞ்சும் 28 மாவட்டங்கள் : ஐஐடி புது ஆய்வு
புதுமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ள இந்த படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகிய 5 டைரக்டர்கள் நடித்துள்ளனர். இந்த 5 பேரில் ஒருவர் வில்லன். அது யார் என்பது சஸ்பென்ஸ். படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்த நிலையில், இதன் பாடல் வெளியீட்டு விழா, மார்ச் 17-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணத்தால், அது ரத்தானது.
இந்நிலையில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும். மேலும் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பதால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் எழும். அதனால் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக OTT தளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4.5 கோடியில் தயாரான இந்த படத்தை 9 கோடி ருபாய் கொடுத்து அமேசான் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த, ’பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platform-ல் வெளிவரப்போவதாக செய்தி வந்தது. மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
கொரோனா நிவாரணம் : ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ.6000 – புதுவை முதல்வர் அதிரடி!
அவர்களை தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platform-ல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது” என தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”