/tamil-ie/media/media_files/uploads/2021/01/vikatan_2020-11_1aaf2e5b-8447-4121-a239-cb6c14beed80_WhatsApp_Image_2020_11_30_at_12_49_33.jpeg)
jyothika raatchasi jyothika award : தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ லெட் படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கு-க்கு வழங்கப்படுகிறது. ராட்சசி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜோதிகா இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த 36 வயதினேலே திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் கால் பதித்தார். ’வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல’ என்ற படையப்பா படத்தின் வசனத்தை போல இன்றும் ஸ்வீட் சிக்ஸ்டின் ஆக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ஜோதிகா.
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான. நாயகி நடிகையரில் ஒருவரும் பல ஆண்டுகளாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்பவரும் அழகு, திறமை, ஆளுமைப் பண்புகள் என அனைத்துக்காகவும் ரசிகர்களின் பேரன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவருமான நடிகை ஜோதிகா .
ராட்சசி' படத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக முதன்மைக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த விதம் பரவலான கவனம் ஈர்த்தது. கூடவே விமர்சனத்தையும் சந்தித்தது. அரசு பள்ளி ஆசிரியர்களை தவறாக பிரதிப்பலிப்பதாக பிரச்சனைகளும் வெடித்தது. அதையும் தைரியமாக சந்தித்தார். இன்று அந்த கதாபாத்திரத்துக்கு தான் ஜோதிகா விருதை வென்றுள்ளார். யாருக்கும் அசராத அரசு பள்ளி தலைமை ஆசிரியராக ஜோதிகா துணிச்சலாக நடித்திருப்பார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.