கோலிவுட்டை ஒரு கைப்பார்த்துக் கொண்டிருக்கும் மிஸ்டர் கூல் யோகி பாபு, நயந்தாராவைத் தொடர்ந்து யாருடன் ஸ்கீரினை ஷேர் செய்திருக்கிறார் தெரியுமா?
ஜோதிகா படத்தில் யோகி பாபு:
நயன் தாராவின் அசத்தலான நடிப்பில் சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை யோகி பாபுக்காகவே பார்த்த ரசிகர் பட்டாளம் ஏராளம். ‘ எனக்கு கல்யாண வயசுத்தான் வந்துடீச்சிடி’ என நயனை பார்த்து காதல் ரசத்தில் யோகி ஆடிய ..இல்லை இல்லை யோகி வாக் செய்த பாட, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டது.
திரையில் யோகியின் காமெடி கலாட்டாவை கைத்தட்டி ரசித்த ரசிகர்கள் அவரை தலையில் வைத்துக் கொண்டாட துவங்கினார்கள். சமீபத்தில் விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யோகியின் பேச்சுக்கு விசில்கள், கைத்தட்டல்கள் பறந்தன.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-80.jpg)
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கும் யோகி பாபு அடுத்து ஜோதிகாவுடன் சேர்ந்து காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார். இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ’துமாரி சுலு’ திரைப்படம் தமிழியில் தயாரகிக் கொண்டிருக்கிறது.
இந்தியில் வித்யாபாலன் நடித்திருந்த ரோலில் தமிழில் ஜோதிகா நடிக்கிறார். படத்தில் அவரின் கணவராக நடிகர் வித்தார்த்,மஞ்சு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபும் நடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கூடவே படத்தில் யோகி பாபுவின் காதலுக்கு ஜோதிகா உதவும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம். இந்த காட்சியில் யோகி காமெடி சீன்களை பார்த்து ஜோதிகாவே கைத்தட்டி சிரித்தாராம்.
இந்த தகவலை படக்குழு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானது யோகியின் ரசிகர்கள் செம்ம ஹாப்பியில் உள்ளனர். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.