Advertisment

தமிழ் சினிமாவை விட்டு வெளியேறியது ஏன்? நடிகை ஜோதிகா விளக்கம்

கமல்ஹாசன் தொழில்துறையில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையாக வேறு யாராலும் முடியாது என்று சித்தார்த் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Jyothika Siddarth

தமிழ் நடிகர்களான ஜோதிகாவும் சித்தார்த்தும் சமீபத்தில் தங்களின் சினிமா வாழ்க்கை குறித்து விவாதித்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் நடிப்பில் இருந்து விலகிய நிலையில், 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு  ரோஷன் ஆண்ட்ரூஸின் இயக்கத்தில் வெளியான 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார்.  

Advertisment

மேலும் சினிமா வாழ்க்கையில், ஆரம்ப கட்டத்தில் இருக்கும் டைப் காஸ்டிங்கின் ஆபத்துகளைத் தவிப்பதில் உறுதியாக இருந்த நடிகை ஜோதிகா இந்த இடத்தை அடைவதற்கு, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்த காதல்-தி கோர், திரைப்படம் ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் வழக்கத்திற்கு மாறான ஒரு திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. ஜியோ பேபி இயக்கிய இந்த படம் ஒரு ஓரினச்சேர்க்கையாளரின் மனைவி தனது கணவரை சமூகத்திற்கு வெளியே கொண்டு வர அவருக்கு உதவும் முயற்சிகளைச் கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் தனது திரைப்படத் தேர்வுகளைப் பற்றி பேசிய ஜோதிகா, திரைத்துறையில் தான் வேண்டாம் என்று சொல்லும் நிறைய வாய்ப்புகள் உள்ளன, அதே சமயம்  தமிழ் துறையில் உண்மையான மாறுபட்ட கதாபாத்திரங்கள் அரிதாகவே கிடைக்கிறது."பெண்களைப் பொறுத்தவரை, இது முற்றிலும் வேறுபட்ட போர். ஒரு நடிகைக்கு 35-40 ஆகும்போது, வாய்ப்புகள் குறையும். நடிப்பில் நன்றாக இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிது.

என்னைப் பொறுத்தமட்டில் நான் நிறைய நல்ல வேடங்களில் நடித்துள்ளேன். ஒரு படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை, இன்னொரு படத்தில் இல்லத்தரசியும் நடத்தும் அறப்போர் கேரக்டரில் நடித்திருக்கிறேன். நான் அங்கே எல்லாவற்றையும் நன்றாகச் செய்தேன். ஆனால் அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் அதற்கு பதிலாக ஒரு மலையாளப் படத்தைத் தேர்வு செய்தேன், அது என்னை இங்கு கொண்டு வந்தது என்று கூறியுள்ளார். மேலும் என்னுடைய பயணம் முழுவதும் தமிழ் வழியாகவே உள்ளது, ஆனால் ஒரு மலையாளப் படம் என்னை இந்த மேடையில் இவ்வளவு அழகான நடிகர்களுடன் கொண்டு வந்து அமர்த்தியுள்ளது.

"பெண்களைப் பொறுத்தவரை, பல விஷயங்களுக்கு இல்லை என்று சொல்ல வேண்டும், குறிப்பாக பிரபலமான சினிமா உலகில், 90 சதவிகிதம், பெண்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்பது புரியவில்லை. எனவே, எனது படங்களைப் பார்த்துவிட்டு பெண்கள் வெளியில் வரும்போது அவர்கள் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இது ஒரு பயணம். இது அதன் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளது, ஆனால் உங்கள் விருப்பமே அதைத் தீர்மானிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

கமல்ஹாசனிடம் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து சித்தார்த்

இந்த உரையாடலின் போது, சித்தா நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த், கமல்ஹாசன் மற்றும் அவரது படங்களின் ஆழத்தை பிரதிபலித்தார். தமிழ் சூப்பர் ஸ்டார் திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எவராலும் ஈடுகட்ட முடியாது என்று கூறிய அவர், கமல்ஹாசன் மற்றும் அவரது படத்தயாரிப்பு வழிகாட்டியான மணிரத்னத்திடம் அவர்கள் எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க பயத்தை சமாளித்தார்கள் என்பது குறித்து அவர் அடிக்கடி ஆலோசனை கேட்பதைக் பற்றி பேசினார்.

கமல்ஹாசன் இல்லையென்றால் நான் நடிகராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் செய்வதை அவர் செய்யும் போது அவர் என்ன பணயம் வைத்திருக்கிறார் என்பதை நாம் பார்க்க முடியாது. மம்முட்டியை நான் இப்போது அவரது வயதில் காதல் - தி கோர் படத்திற்காகப் பாராட்டும் விதம், கடந்த 40 வருடங்களில் அவர் செய்த அனைத்தையும் செய்ததற்காக கமலைப் பாராட்டலாம்.

"அதுதான் நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்... (அவர் எனக்குக் கற்பித்த பாடங்கள்) இன்னும் குறைவான பயத்துடன் முன்னோக்கிச் செல்வது மற்றும் எனது உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நான் ஒரு நட்சத்திரமாக அல்ல, ஒரு நடிகனாக இருக்க விரும்புகிறேன், என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்," என்று பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment