சூர்யாவை விட விஜய் சிறந்தவர்: கணவர் பற்றிய ட்ரோலுக்கு ஜோதிகா கூல் ரியாக்ஷன்!

தனது கணவர் நடிகர் சூர்யாவுடன் நடிகர்-அரசியல்வாதி விஜய்யை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ட்ரோலுக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
surya Jyothika vijay

உங்கள் கணவரை விட நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் சிறந்தவர் என்ற விமர்சனத்திற்கு நடிகைவும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா பதில் அளித்துள்ளார்.

Advertisment

Read In English: Jyotika reacts to a troll saying Vijay is ‘better’ than her husband Suriya. Here’s what she said

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள ஜோதிகா, முதல் முறையாக டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வரும் பிப்ரவரி 28-ந் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில், ஜோதிகா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இதனிடையே சமீபத்திலர் தனது கணவர் நடிகர்-தயாரிப்பாளர் சூர்யாவை நடிகர்-அரசியல் தலைவர் விஜய்யுடன் ஒப்பிட்டு வெளியான ஒரு ட்ரோல் கருத்துக்கு நடிகை ஜோதிகா காமெடியாக பதில் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்ட ஒரு பதிவின் உங்களை கணவரை விட, நடிகர் விஜய் சிறந்தவர் என்று ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு, ஜோதிகா ஒரு சிரிப்பு எமோஜியை வைத்து பதில் கொடுத்திருந்தார்.  

Advertisment
Advertisements

jyothika-response-to-a-vj-kanni-v0-4bmt42rlmale1

ஜோதிகாவின் பதிவை பார்த்த அந்த நபர் பின்னர் தங்கள் கருத்தை நீக்கினார், ஆனால் மற்றவர்கள் அதே த்ரெட்டில் ஒப்பீடு தொடர்பாக பல கருத்துக்களை பதிவிட தொடங்கினர். ஒருவர், “உங்கள் கணவர் சூர்யாவை விட பிரதீப் ரங்கநாதன் சிறந்தவர்” என்றும், “உண்மை என்னவென்றால் விஜய் உங்கள் கணவர் மற்றும் கணவர் சகோதரரை விட சிறந்தவர், முதலில் டிராகனை வென்று இன்றைய தொகுப்பை நேசிக்கச் சொல்லுங்கள்” என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: வெளியில் தான் நடிகர்கள்: வீட்டுக்கு உள்ளே நாங்கள் வேற... கணவர் சூர்யா குறித்து மனம் திறந்த ஜோதிகா!

இந்த கருத்து தொடர்பான பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது பலரின் கவனத்தையும் கருத்துகளையும் பெற்றது, ஜோதிகாவுக்கு ஆதரவாக பலர் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல் இரண்டு நடிகர்களை ஒப்பிட்டுப் பேசியதற்காகவும் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை கூறி வருபவர்களை விமர்சித்து வரும் நிலையில், அவர்கள் இருவருக்கும் பின்னால் உறுதியான உழைப்பு உள்ளது என்றும் கூறி வருகின்றனர். 

Jyothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: