Advertisment

சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறேனா? உண்மை என்ன? மனம் திறந்த ஜோதிகா

இந்தியில் தனது சைத்தான் படத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் ஜோதிகா, அடுத்து பார்வையற்ற தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ஸ்ரீகாந்த் படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Surya Jyot

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்து 11 வருடங்கள் ஆகிறது

தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ஜோதிகா, சமீபத்தில் இந்தியில் வெளியான சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், இந்தி சினிமாவுக்கு திரும்பியது குறித்து நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் சூர்யாவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு பிள்ளைனகள் உள்ளனர்.

ஆங்கிலத்தில் படிக்க : Jyotika reveals whether she is teaming up with Suriya after 11 years? ‘Need the right script’

திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். சூர்ய தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், ஜோதிகா இந்தியில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அஜய் தேவ்கனுடன் இவர் இணைந்து நடித்த சைத்தான் திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியை குவித்துள்ளது.

இது குறித்து பேசிய நடிகை ஜோதிகா, எனது வாழ்க்கையில் வணிக ரீதியாக வெற்றிகரமான முதல் இந்தி திரைப்படத்தை குறிப்பதால், இந்த படம் தனக்கு சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளார். 1998-ம் ஆண்டு இந்தியில் வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற படத்தின் மூலம்  ஜோதிகா அறிமுகமானார். அதன்பிறகு இந்தி சினிமாவை விட்டு கோலிவுட்டுக்கு சென்ற அவர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அறிமுகமானது இந்தி படம் என்றாலும் அதன்பிறகு அவர் இந்தியில் நடிக்கவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் இங்கிருந்து விலகிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் தமிழில் பிஸியாகிவிட்டேன், ஒருவேளை ஒருவித தவறான எண்ணமாக இருக்கலாம். எனக்கு ஹிந்தி தெரியாது அல்லது நான் ஒரு தென்னிந்தியர் என்று மக்கள் நினைத்தார்கள். காலத்தின் விதி. மீண்டும் இந்தி சினிமாவுக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. இங்குதான் நான் பிறந்தேன். இந்தி என் தாய்மொழி. எனவே, திரும்பி வருவது நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் நீண்ட காலமாக இணைந்து நடிக்கவில்லை. தற்போது மீண்டும் தனது கணவருடன் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து கேட்டபோது இல்லை. நாங்கள் இப்போது ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. அது வெறும் வதந்தி. சரியான ஸ்கிரிப்ட் வரும் வரை காத்திருக்கிறோம். நாங்கள் இணைந்து நடிக்க எங்களுக்கு சரியான ஸ்கிரிப்ட் தேவை.

பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்கா காக்கா, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் என ஜோதிகாவும் சூர்யாவும் இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 2006-ல் திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, 2015 இல் 36 வயதினிலே படத்துடன் மீண்டும் நடிப்பதற்கு வந்தார். அதன் பிறகு நடிகை பல தமிழ் படங்களில் நடித்துள்ளார், ஆனால் இப்போது ஜோதிகா இந்தி திட்டங்களில் ஆர்வம் காட்டுகிறார்.

அவரது அடுத்த படமான ஸ்ரீகாந்த், பார்வையற்ற தொழிலதிபர் மற்றும் பொல்லன்ட் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறு படமாகும். இப்படத்தில் அவருக்கு ஆசிரியையாக ஜோதிகா நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jyothika actor surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment