Jyothika's Next Movie : திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா, ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரியானார். இறுதியாக ரேவதியுடன் இவர் இணைந்து நடித்த 'ஜாக்பாட்' படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் கல்யாண் இயக்கியிருந்த இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார். தற்போது கார்த்தி மற்றும் சத்யராஜுடன் இணைந்து ‘தம்பி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் ஜோதிகாவின் அடுத்தப் படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. ’கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இதனை இயக்குகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
Advertisment
Advertisements
பெயரிடப்படாத இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. கிராம பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக, முழு ஃபேமிலி எண்டெர்டெயினராக இப்படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?