Advertisment

'2 காட்சியில் நடிக்கணுமா? எவ்வளவு கேவலமான கேள்வி!' ஜோதிகா ஆவேசம்

பாசம் இருக்கும் சமயத்தில் தமிழ்நாட்டு மருமகள் என்பார்கள் ரசிகர்கள். கோபம் வந்தால் இந்திக்காரி என சொல்வார்கள். சோஷியல் மீடியாவில் சிலர் குயின் என்றும், சிலர் கிழவி என்றும் கூறுவார்கள். அப்போ நான் யார்? நடிகை ஜோதிகா கேள்வி

author-image
WebDesk
New Update
Jyothika

நடிகை ஜோதிகா

என்மேல் பாசம் இருக்கும் சமயத்தில் தமிழ்நாட்டு மருமகள் என்பார்கள் ரசிகர்கள். கோபம் வந்தால் இந்திக்காரி என சொல்வார்கள் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. தனது நடிப்பு திறமையில் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். ரஜினி, கமல் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜோதிகா திரையுலகை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார்.

இதையடுத்து தற்போது ஹீரோயின்களை மையமாகக் கொண்ட படங்கள் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் 'தி காதல் கோர்' என்ற படம் வெளியானது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா. 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் மூலமாக கவனம் ஈர்த்த ஜியோ பேபி இயக்கத்தில் தற்போது 'காதல் தி கோர்' படம் வெளியாகியுள்ளது. படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக மம்மூட்டி நடித்திருந்தார். விமர்சகர்களின் பாராட்டு மழையிலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிலும் 'காதல் தி கோர்' படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா பிஹைண்ட்வுட் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய இந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், நான் அமைதியான பெண். இந்தப் படத்தில் எனது குடும்பத் தலைவி கதாப்பாத்திரம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது மகிழ்ச்சி. நான் நடித்ததில் 36 வயதினிலே, ராட்சசி ஆகியவை எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படங்கள். எனது குழந்தைகளுக்கு ஜாதி, மதம், வடக்கு தெற்கு என்ற பிரிவினை எதுவும் தெரியாது.

சினிமாவில் நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் செய்த பெரும்பாலான கேரக்டர்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடுவது போல், நடிகைகளை ரசிகைகள் கொண்டாட வேண்டும். சினிமாவில் ஹீரோக்களை விட பெண்கள் பத்து மடங்கு அதிகமாக உழைக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் மிகவும் குறைவு.

கதாநாயகிகளை மையப்படுத்தி வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும். கடந்த 10, 15 ஆண்டுகளாக புது இயக்குனர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை இயக்கி வருகின்றனர். தமிழில் பெரிய இயக்குனர்கள் பெண்களை மையப்படுத்திய படங்களை இயக்குவதில்லை. அந்த மனநிலையே இல்லை. இந்தியில் சஞ்சய் லீலா பான்சாலி, நடிகை ஆலியா பட்-ஐ வைத்து கங்குபாய் படத்தை இயக்கினார். இப்படி இந்தி, மலையாளத்தில் பெரிய இயக்குனர்கள் பெண்களை மையப்படுத்தி படங்களை இயக்குகின்றனர்.

தமிழில் பெரிய இயக்குனர்கள் அவ்வாறான படங்களை இயக்குவதில்லை. பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், அதில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. இப்படியான கதாபாத்திரத்திற்கு நான் எதுக்கு என என்னை சந்திக்க வரும் இயக்குனர்களிடம் கேட்டிருக்கிறேன். என்னிடம் வந்து ரெண்டு சீனில் நடித்தால் போதும் என்றெல்லாம் கேட்பார்கள். இது உண்மையில் எவ்வளவு கேவலமான கேள்வி.

பெண்கள் வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டே இருக்கனும். திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக நானாக விரும்பி எடுத்துக் கொண்டது தான் அந்த கேப். சினிமாவை தாண்டியும் எனக்கு ஒரு வாழ்க்கை உள்ளது. என்மேல் பாசம் இருக்கும் சமயத்தில் தமிழ்நாடு மருமகள் என்பார்கள் ரசிகர்கள். கோபம் வந்தால் இந்திக்காரி என சொல்வார்கள். சோஷியல் மீடியாவில் சிலர் குயின் என்றும், சிலர் கிழவி என்றும் கூறுவார்கள். அப்போ நான் யார்?.” இவ்வாறு பல விஷயங்கள் குறித்து அந்த பேட்டியில் பேசினார் ஜோதிகா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment