/indian-express-tamil/media/media_files/2025/09/04/k-b-ganesh-kumar-2025-09-04-13-20-21.jpg)
பிரபல நடிகர், 3 முறை அமைச்சர், தொடர்ந்து 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ; அப்பா தோற்ற போதும் வெற்றி பெற்ற மகன்; இந்த நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் நடிகர்கள் அரசியலில் நுழைவது என்பது புதிதல்ல. அதேபோல், அரசியலில் நுழையும் அனைத்து நடிகர்களுக்கும் வெற்றி கிடைப்பதில்லை. ஆனால், கேரளாவின் முன்னணி நடிகர் கே.பி.கணேஷ் குமார், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது மாநில அமைச்சராகவும் இருக்கிறார்.
கே.பி.கணேஷ் குமாரின் அரசியல் பயணம்
கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராதாகிருஷ்ண பிள்ளையின் மகன் கே.பி.கணேஷ் குமார். இவர் 1985-ம் ஆண்டு 'இரகள்' என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர். இருப்பினும், இவரின் மற்றொரு முகம் அரசியல்வாதி.
இவர் தனது தந்தையைப் போலவே அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். 2001-ம் ஆண்டு, முதன்முதலாக பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அன்று முதல் இன்றுவரை, தொடர்ந்து 5 முறை பத்தனாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
3 முறை அமைச்சர் பதவி
2001-2003: முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரான போதே, போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், தனது தந்தை அமைச்சர் ஆவதற்காக இரண்டே ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்தார்.
2011-2013: உம்மன் சாண்டி அமைச்சரவையில் வனத்துறை, விளையாட்டு மற்றும் சினிமா துறை அமைச்சராகப் பணியாற்றினார். ஆனால், குடும்ப வன்முறை வழக்கில் சிக்கியதால் பதவியை இழந்தார்.
2023-தற்போது: இடதுசாரி கூட்டணியில் மீண்டும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கே.பி.கணேஷ் குமார் தனது கட்சியில், தொடர்ந்து 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரே நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை ராதாகிருஷ்ண பிள்ளை தேர்தலில் தோல்வியுற்ற போதும், கணேஷ் குமார் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார். இவர் ஒரு நடிகராகவும், அதே நேரத்தில் வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் இருந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.