சர்சார் பட சர்ச்சையை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குனர் பாக்யராஜ் ராஜினாமா செய்து அளித்த கடிதத்தை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது.
இயக்குநர் பாக்யராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முருகதாசிடம் நான் கெஞ்சியும் உடன்படாததால், வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின் மிகப் பெரிய படமான சர்கார் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் எனக் கூறினார்.
பாக்யராஜ் ராஜினாமா
இது தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன்பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்கார் படம் தொடர்பான புகாரை பரிசீலித்து அதில் நியாமான முடிவு எடுக்கப்பட்டபோதும், அதில் அசௌகரியங்களை தான் சந்திக்க வேண்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.
November 2018தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து அறிக்கை வெளியிட்ட பாக்கியராஜ். #Bhagyaraj #KBhagyaraj #ARMurugadoss #Vijay #Sarkar pic.twitter.com/cu3ORwSeUW
— IE Tamil (@IeTamil)
தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து அறிக்கை வெளியிட்ட பாக்கியராஜ். #Bhagyaraj #KBhagyaraj #ARMurugadoss #Vijay #Sarkar pic.twitter.com/cu3ORwSeUW
— IE Tamil (@IeTamil) November 2, 2018
அதற்கு முக்கிய காரணம் தான் தேர்தலில் வெற்றி பெறாமல் வந்ததுதான் என தெரிவித்துள்ளார். எனவே தனது பதிவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் தனது அறிக்கையை வாசித்துவிட்டு சென்றார்.
தற்போது பாக்யராஜுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், பதில் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘தங்கள் ராஜினாமா கடிதம் குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் போனில் பேசினோம். அனைவருமே ஒருமித்த குரலில் தங்கள் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே எப்போதும் போல நீங்களே தலைவராக தொடரவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.