எப்போதும் ஆண்களை மட்டுமே குறை கூற முடியாது: கே.பாக்யராஜ் சர்ச்சை பேச்சு

பொள்ளாச்சி வழக்கில் ஆண்கள் மட்டுமே தவறு செய்யவில்லை. உங்களுடைய (பெண்களின்) பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். நீங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தீர்கள்

By: Updated: November 27, 2019, 11:07:00 AM

கருத்துகளை பதிவு செய் என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனரான  கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். அந்த விழாவில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.  அந்த கருத்து தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் முற்காலத்தில் கட்டுப்பாட்டோடு இருந்தனர், ஆனால் நவீனமயமாக்களால் பெண்கள் தங்கள் கட்டுப்பாடை இழந்துவிட்டனர். பெண்களின் பாதுகாப்பு இல்லதா சூழ்நிலைக்கு, பெண்களும் ஒரு முக்கிய காரணம் என்றார்.

 

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா?  என்ற வசனத்த்தைக் கூறி, தொலைபேசியால் பெண்கள்  தங்கள் வாழக்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தவறவிடுகிறார்கள்.

“தவறுகளை நடக்க அனுமதிக்கும் ஒரு சூழ்நிலையை பெண்களே உருவாக்குகிறார்கள். பெண்கள் சரியாக நடந்து கொண்டால் சமூகத்தில் அனைத்தும் சரியாக இருக்கும். ஆண்களை மட்டும் குறைகூறுவதால் பயனென்ன ? என்றும் கூறினார்.

இயக்குனர் கே. பாக்யராஜ் தனது பேச்சு இதோடு மட்டும் நிறுத்தவில்லை.”பொள்ளாச்சி வழக்கில் ஆண்கள் மட்டுமே தவறு செய்யவில்லை. உங்களுடைய (பெண்களின்) பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். நீங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தீர்கள், அது ஒரு பெரிய தவறு ” என்றும் வாதிட்டார்.

ஆண்கள், பல திருமணம் செய்தாலும், அதை நிர்வகிக்கும் உணர்வு ரீதியான பக்குப்பட்டவர்கள். ஆனால், பெண்களுக்கு இயல்பாகவே அதுபோன்ற பக்குவம் இல்லை. அதனால் தான் நாம் தொலைக்காட்சியில் மனைவி கொலை செய்தால் போன்ற செய்திகளை நாம் கடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாக்யராஜின், இந்த பேச்சு பொது மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:K bhagyaraj controversial speech about women pollachi case evokes sharp reaction

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X