நடிகர் விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என்பது ஹாட் டாபிக் ஆக இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் படுதோல்வி அடைவார் என தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார். தயாரிப்பாளர் கே ராஜன் வலையொளி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசினார்.
Advertisment
தொடர்ந்து பேசுகையில் விஜய்யிடம் சில தனித்த குணம் இல்லை. அவரால் அரசியலில் வெற்றிபெற முடியாது. 234 தொகுதிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்தது அரசியல். ஆனால் அவர்களை பாராட்டியது நல்ல விஷயம். இரவு பாடசாலை அமைப்பதும் நல்ல திட்டம். ஆனால் காமராஜர் பிறந்தநாளில் அதைத் தொடங்குவது அரசியல்.
இயக்குனர் எஸ்.ஏ.சி.பிறந்த நாள்
கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.க்கு தனித்த குணநலன்கள் உண்டு. அவர்கள் எத்தனை ஏவுகணைகளையும் தாங்குவார்கள். ஆனால் விஜய் அப்படி அல்ல. அவர் தனது தந்தையுடன் முரண்படுகிறார். அவரின் தந்தை விஜய்யை அரசியலுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்தார்.
Advertisment
Advertisements
தற்போது புஸ்ஸி ஆனந்த் பின்னால் விஜய் செல்கிறார்” என்றார். மேலும், மார்க்கெட் இருக்கும் நேரத்தில் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். அப்போதுதான் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள முடியும். விஜய்க்கு சினிமாவை விட இமேஜ் கொடுப்பது இல்லை. ரஜினி வரேன் வரேன் என ஏமாற்றினார். ஆனால் விஜய் அதை சரியாக புரிந்துவைத்துள்ளார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“