நடிகை ஆண்ட்ரியாவின் ‘கா’ படப் பூஜை சென்னையில் நடந்தது.

நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ள ‘கா’ படத்திற்கான படபூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா உட்பட படத்தின் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இயக்குநர் நாஞ்சில் உருவாகவுள்ள இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படமாகும்.

ka poster

ka poster

‘கா’ என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள் . காட்டை மையப்படுத்திக் கதை உருவாக்கப் பட்டுள்ளதால் இப்படத்திற்கு ‘கா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். விலங்குகள் வாழும் காடுகளுக்கு சென்று அங்குள்ள மிருகங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக நடிக்கிறார். வைல்டு லைப் ஃபோட்டோகிராபி கலையைக் குறித்து தயாராக இருக்கிறது இப்படம். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

ka movie poojai

ka movie poojai

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ என்ற ஹீபடத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தைத் தயாரிக்கின்றனர்.

ka

ka

இந்தப் படத்தின் துவக்கத்தை முன்னிட்டு ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

“நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய படம் ‘கா’ உருவாக இருக்கிறது. இது மிகவும் சவாலான படம். ஆனால் அதில் தானே சுவாரசியம் உள்ளது.”

இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலை, மூணார் ஆகிய காடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

×Close
×Close