Advertisment

திறக்கப்படும் திரையரங்குகள்... டாப்ஸி, விஜய்சேதுபதி படங்கள் மறுவெளியீடு!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதர்நாத் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களும், சில ஹாலிவுட் படங்களும் மீண்டும் திரையில் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
Oct 14, 2020 16:56 IST
Ka Pae Ranasingam, Thappad, Kedarnath, PM Narendra Modi Movies releasing after cinema halls reopen on October 15

கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் பலவும் மூடபட்டன. மார்ச் மாதத்திற்கு பிறகு, நாளை மீண்டும் திரையரங்குகள் இந்தியா முழுவதும் திறக்கப்பட உள்ளது. ஒரு சீட் இடைவெளி விட்டு மற்றொரு சீட்டில் அமர வேண்டும். உணவுகள் எல்லாம் கேண்டீனில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது போன்ற மத்திய அரசின் விதிகளை பின்பற்றி நாளை திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.

Advertisment

படப்பிடிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே தியேட்டர் மற்றும் ஒ.டி.டியில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த படங்கள் மறு வெளியீடு செய்யப்பட உள்ளது. அதன்படி விவேக் ஓப்ராய் நடிப்பில் வெளியான நரேந்திர மோடி நாளை வெளியாக உள்ளது. கடந்த வருடம் மே மாதம் இந்த படம், இந்திய பிரதமர் மோடியின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபது மற்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் ஒ.டி.டியில் வெளியான இந்த படம் மீண்டும் அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. ஜீ ப்ளெக்ஸில் அக்டோபர் 2ம் தேதி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவ் சின்ஹா நடிப்பில் வெளியான தப்பட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வீட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறைகள் குறித்து வெளியான இந்த படத்தில் டாப்ஸி பவைல் குலாத்தி ஆகியோர் நடித்திருந்தனர். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதர்நாத் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களும், சில ஹாலிவுட் படங்களும் மீண்டும் திரையில் வெளியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Vijay Sethupathi #Taapsee Pannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment