”குழந்தை இல்லாம ஒரு வாழ்க்கையா” – குழந்தையை தத்தெடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!

Kaajal Pasupathi: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டியின் முதல் மனைவி தான் காஜல் பசுபதி.

Kaajal Pasupathi, bigg boss tamil
Kaajal Pasupathi

Kaajal Pasupathi: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடம் பெரிதும் பரிச்சயப்படாத பலருக்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டவர், நடிகை காஜல் பசுபதி. சின்னத்திரையில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்திருந்த காஜலுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி தான், மக்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.

இவர் நடன இயக்குநரும், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டியின் முதல் மனைவி. கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர். அதன் பிறகு தான் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் சாண்டி.

இந்நிலையில், தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காஜல். “ராகவா லாரன்ஸ் மாஸ்டர், நான் உங்கள் எண்ணை தொலைத்து விட்டேன். ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது. தத்தெடுப்பது எளிதானது அல்ல, தயவுசெய்து ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு எனக்கு உதவுங்கள். குழந்தையின் செலவுகளை நான் கவனித்துக்கொள்வேன். நீங்கள் எனக்கு உதவினால் நன்றியுடன் இருப்பேன். நன்றி மாஸ்டர்” என இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் காஜல்.

ஆதரவற்றோர் இல்லம் உட்பட பல சமூக சேவைகளை செய்து வரும், லாரன்ஸ் கட்டாயம் காஜலுக்கு உதவுவார் என நம்புவோம்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kaajal pasupathi bigg boss tamil raghava lawrence

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express