/tamil-ie/media/media_files/uploads/2018/05/Kaala-Poster-5.jpeg)
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’காலா’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி உலகம் கடந்து வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த காலா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் நாடு முழுவதும் எழுந்தன. பாஸிட்டிவில் தொடங்கி நெகடிங் வரை, ரசிகர்களின் பார்வையில் தொடங்கி பிரபலங்கள் வரை ’காலா’ திரைப்படங்கள் ஏகப்பட்ட கருத்துக்களை சந்தித்து வருகிறது.
இருந்தபோதும், படத்தின் வசூல் சாதனை ஒருபக்கம் எகிறிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் எந்த இந்திய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை ரஜினியின் காலா பெற்றுள்ளது.ஐந்து நாட்களில் இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ. 7.23 கோடி வசூலித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், இந்த படம் நான்கு நாட்களில் 2.04 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய படம் என்ற பெருமை காவுக்கு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் காலாவை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டு நாட்களில் இந்தப் படம் 6 கோடியே 83 லட்சத்தை கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் ஒருபக்கம் படம் மீதான பல்வேறு விமர்சனங்கள் நீண்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் படம் டாப் வசூலை பெற்று வருகிறது.வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ் தெரிவித்திருக்கும் விபரம்... ஆஸ்திரேலியாவில் 2018ல் வெளியான டாப் 5 பாக்ஸ் ஆஃபிஸ் படங்கள்
1. பத்மாவதிA $ 1,728,642 (இந்தி + தமிழ் + தெலுங்கு)
2. காலா A $ 402,213
3. வீடி வெட்டிங் A $ 341,118
4. பாரத் அனே நேனு <தெலுங்கு> A $ 339,133
5. கேரி ஆன் ஜட்டா 2 <பஞ்சாபி> A $ 327,736
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.