/tamil-ie/media/media_files/uploads/2018/04/kaala-single-track-release.jpg)
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் முதல் பாடல் வீடியோ நாளை மாலை வெளியிடப்பட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளது ‘காலா’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மே 9ம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். முன்னதாக கபாலி படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன், இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவித்துள்ளார். சமீபத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் பாடல் வீடியோ ஒன்றை வெளியிடுவது வழக்கமான செயலாகிவிட்டது. அதேபோல் ‘காலா’ படத்தின் ‘செம்ம வெயிட்டு’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
,
A surprise to Superstar fans. #kaala 1st single #semmaweightu will be released tom evening at 7 pm. #rajinism#thalaivar@Music_Santhosh@beemji@vinod_offl@humasqureshipic.twitter.com/mLDt1oCfm2
— Dhanush (@dhanushkraja) April 30, 2018
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.