காலா: கண்ணம்மா பாடல் வீடியோ பிரோமோ வெளியீடு

காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிருவனம் பாடல் வீடியோ பிரோமோக்களை வெளியிட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அனைத்து வேலைகளையும் படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப்பு நிறுவனம் ‘வண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில், வண்டார்பார் ஃபிலிம்ஸ் இப்படம் குறித்த பிரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

இன்று மாலை, காலா படத்தின் ‘கண்ணம்மா’ பாடல் வீடியோ பிரோமோவை வெளியிட்டது வண்டர்பார் ஃபிலிம்ஸ். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘கண்ணம்மா’ பாடலை சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் பிரதீப் குமார் பாடியுள்ளனர். பாடலின் வரிகளை எழுத்தாளர் உமா தேவி எழுதியுள்ளார்.

×Close
×Close