சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீடு மே 9ம் தேதி நடைபெறும் என்று நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/kaalaa-300x200.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் 2வது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் ரஜினியின் திரைப்படம் ‘காலா’. கருப்பு ஆடையில் கம்பீரமான கதாநாயகனாகத் தோற்றமளிக்கும் இப்படத்தில் வில்லனாக இடம்பிடித்துள்ளார் பிரபல நடிகர் நானா ப்டேகர். இவர்களுடன் இணைந்து சில முக்கிய கதாப்பாத்திரங்களில் சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
,
முன்னதாக ஏப்ரல் 27ம் தேதி காலா படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரைத்துறையினரின் போராட்டத்தால் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது .
,
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ‘காலா’ படத்தின் பாடல்கள் மே 9 ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளரும் , நடிகருமான தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கு இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினி ஜோடியில் வெளிவந்த ‘கபாலி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அந்தப் படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
இதையடுத்து ‘காலா’ படத்தில் மீண்டும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதனால் காலா படத்தின் பாடல்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.